Friday, November 14, 2014

மோவா

பறக்காத பறவை மோவா (moa).

மனிதர்கள் நியூஸிலாந்தில் நுழையும் முன்பு வரை சுதந்திரமாக... ஒரே ஒரு இனக் கழுகினைத் தவிர வேறு எவற்றுக்கும் பயப்படாமல் வாழ்ந்த ராட்சத பறவையினம் இது.

இந்த இனத்தில் பல உபபிரிவுகள் இருந்திருக்கின்றன. மிகக் குள்ளமானது, ஒரு வான்கோழியை விடச் சிறிது உயரம் குறைந்ததாகவும் அதி உயரமானது... அதன் கழுத்து மட்டத்தில் மனிதனின் உயரத்தைவிடவும் உயரமானதாகவும் இருந்திருக்கின்றது. 

பறவை - பறக்கக் கூடியது. காரணப் பெயர் இது. பறக்க இயலாத பறவைகளுக்கும் கூட அவற்றின் நெஞ்சுக் கூட்டுடன் இணைந்ததாக இறக்கை எலும்பு ஒரு சிறிய அடையாளமாகவாவது இருந்திருக்குமாம். ஆனால் மோவா இதற்கு விதிவிலக்கு. இதுவரை கண்டெடுக்கப்பட்ட மோவா உயிர்ச்சுவடுகள் எவற்றிலுமே இறக்கை எலும்புகள் காணப்படவில்லை என்கிறார்கள்.

முதல் மஓறி வந்து இறங்கிய சமயம் பெயரில்லாத இந்த நாட்டில்... காட்டில்... பரவலாகக் காணப்பட்ட இப் பறவைகள் அவர்களுக்கு இரையாகின. இவற்றின் அளவினாலும் பறக்க இயலாத தன்மையினாலும் தப்பிப் பிழைக்க இயலாத நிலைக்கு ஆளாயின. ஒரு மோவாவைக் கொன்றால் ஒரு முழு சமுதாயத்திற்கும் போதுமான உணவு கிடைக்கும். பலசமயம் தேவைக்கு மிஞ்சிப் போய் வீணாவதுவும் நடக்கும்.

காடுகளும் மெதுவே அழிக்கப்பட... முதல் முதலில் இங்கு வந்திறங்கிய ஐரோப்பிய மக்கள் மோவாவை நேரில் காணும் சாத்தியமே இல்லாமல் போயிற்று.
தொல்பொருட்காட்சிச்சாலை ஒன்றில் மீள உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் மோவா ஒன்று.

2 comments:

  1. சகோதரிக்கு வணக்கம்
    தங்கள் தளத்திற்கு என் முதல் வருகை. முதல் வரவே நல்வரவாக இருக்குமென்று நம்புகிறேன். ஒரு செய்தியைத் தங்களோடு பகிர வந்துள்ளேன். அதாவது
    கனவில் வந்த காந்தி எனும் தொடர் பதிவில் கேட்கப்படும் பத்து கேள்விகளுக்கு விடையளிக்க தங்களை இன்முகத்தோடு அழைக்கிறேன் வாருங்கள்
    http://pandianpandi.blogspot.com/2014/11/gandhi-in-dream.html

    ReplyDelete
  2. நல்வரவு. _()_

    அழைப்பிற்கு என் அன்பு நன்றி சகோதரரே!
    அழைப்பை ஏற்று, பதிவேற்றிவிட்டேன். :-)

    ReplyDelete